பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை கடுமையாக பேணுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கருத்து வெளியிடுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 6 மாதங்களில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த வேலைத்திட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்தத் தரப்பினரிடமும் தான் மற்றும் பொலிஸார் ஆதரவாக சரணடையப் போவதில்லையெனவும் இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டார்.