அஷ்ரப் ஏ சமத்
மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் 75 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு தேசிய ஜக்கிய முன்னணி கட்சியின் தலைவர் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அவர்களின் தலைமையில் அஷ்ரப் நினைவு தின பேச்சு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் எம்.எச். அஷ்ரப் பற்றிய பிரதான உரையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உரையாற்றினார்.
வரவேற்புரையை அசாத் சாலி, மற்றும் முன்னாள் அமைச்சர் அஷ்ரப் புத்திரர் அமான் அஷ்ரப் , தமிழ் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், சிங்கள மொழி மூலம் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் உரையாற்றினார்கள். பிரதான மேடையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன ,முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் பிரசன்னமாகியிருந்தனர்
இந் நிகழ்வில் அஷ்ரபின் குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், மும்மதத் தலைவர்கள் மற்றும் தேசிய ஜக்கிய முன்னணி உறுப்பினர்கள் பெருமளவில் காணப்பட்டனர்
இங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மறைந்த தலைவர் அஸ்ரபின் 1993 ஆம் ஆண்டு தான் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பத்தால் சந்தித்தோம். அப்போது அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அதன் பின்னர் பொதுசன பெரமுன மற்றும் எனது கட்சியுடன் இணைந்தார். அதன் பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று என்னுடன் இணைந்து என்னுடன் ஆட்சியமைத்து அரசாங்கத்தை அமைப்பதற்கு விரும்பினார் அவர் ஒருபோதும் எனது கட்சிக்கு எவ்வித பொறுப்புகள், அதிகாரங்கள் கேட்கவில்லை நானே அவருக்கு கப்பல் துறை, துறைமுகம் புனர்வாழ்வு முஸ்லிம் சமய விவகார அமைச்சின் தெரிவு செய்து அவருக்கு வழங்கினார். இதனுடாக கிழக்கு பல சேவைகளை செய்யும்படி கூறினார். அவர் மிகவும் துணிச்சலான, மிகத் திறமை வாய்ந்த, நீதி நியாய மானதொரு அமைச்சராக தனது அமைச்சரவையில் காணப்பட்டு செயல்பட்டார், அவர் ஒருபோதும் தனது அமைச்சினை ஊழல்அற்றதொரு அமைச்சராக செயல்பட்டார். அவர் ஒருபோதும் ஏனைய இனத்திற்கு அநீதி வேறுபாடு காட்டவில்லை. அவர் காலத்தில் அவர் கொழும்பு துறைமுகத்தை மிகப்பெரிய துறைமுகம் திட்டங்களை பிரிட்டிஷ் அரசின் திட்டத்தினை ஆரம்பித்து அதனை நிறைவேற்றினார். அவர் இந்த நாட்டில் புரையோடிப் போயிருந்த அரசியலமைப்பு திட்டத்தை மாற்றியமைத்து என்னுடன் இணைந்து நீலன் திருச்செல்வம், ஜி,எல்.பீரிஸ், அது பாராளுமன்றத்தில் கொண்டுவந்து அனுமதிக்காக நீண்ட நேரம் உரையாற்றினார்
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் – உரையாற்றுகையில்
மறைந்த தலைவர் இந்த நாட்டில் தமிழ் மக்கள் பிரச்சனைக்காக புதிய அரசியலமைப்பை தொடா்ச்சிய பாராளுமன்றத்தில் மிக நீண்ட நேரம் உரையாற்றிதொரு அமைச்சர் அஷ்ரப் அவர் தமிழ் மக்கள் வரலாறு அவரை மறைக்க முடியாது. அத்துடன் அடையாள அரசியலமைப்பினை விடுத்து தேசிய கட்சிகள் சகலரையும் இணைத்து செல்வதற்காக அவர் தேசிய ஜக்கிய முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்திருந்தார். தமிழ் தலைவர்களுடன் அடிக்கடி ஒன்றுகூடி இந்த நாட்டில் புரையோடிப் போயிருந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவர் காலத்தில் மிகவும் பாடுபட்ட ஒரு அரசியல் தலைவர் அவர் தமிழ் தலைவர்களை விட சிறந்த தமிழ் பாண்டியத்தியம் கொண்டிருந்தார். என சுமந்திரன் அங்கு உரையாற்றினார்.
சுனந்த தேசப்பிரிய
மறைந்த அஷ்ரப் மும்மொழிகளிலும் உரையாற்றிக் கூடியவரும் தொலைக்காட்சியிலும் விவாத்திலும் ஈடுபட்டார் அவர் தேசிய அரசியலில் இறுதிக் கால கட்டத்திலல் பயணிக்க முற்பட்டார். சிறிய கட்சித் தலைவரானார் தேசிய கட்சிகளை இணைத்து இந்த நாட்டில் சிறுபான்மை முஸ்லிம் தலைவர் தலைமை தாங்க முடியும் என தேசிய ஜக்கிய முன்னணி கட்சி ஆரம்பித்தார்.