ஐ. ஏ. காதிர் கான்
இலங்கையில் வருடாந்தம் ஏற்படும் 80 வீதமான மரணங்கள், தொற்றா நோய்களினால் நிகழ்வதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், 35 வயதுக்குக் குறைவான மக்கள் தொகையில் 15 வீதமானோர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்களினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இவர்கள் மத்தியில் சரியான உடற்பயிற்சி கள் இல்லாமல் இருப்பதே, இவ்வாறான நோய் அறிகுறிகள் தென்படக் காரணியாக அமைந்துள்ளது.
பெரும்பாலானோர், உடற் பயிற்சி செய்வதில் சிறிதேனும் ஆசை அல்லது ஆர்வம் இல்லாதவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்கள் உடற் பயிற்சி செய்வதில், அசட்டையாகவும் அலட்சியமாகவும் இருந்து வருவதும், ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறானவர்களின் நலன் கருதி, நாட்டிலுள்ள ஒவ்வொரு அரச வைத்தியசாலைகளிலும் மிக விரைவில் உடற் பயிற்சி (அலகு) பிரிவுகளை அமைப்பதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு முன்னெடுத்து வருவதாகவும் சுகாதார அமைச்சு அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.