ஐ. ஏ. காதிர் கான்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தலைவராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு – சுகததாஸ விளையாட்டரங்கு உள்ளரங்கில் (15) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகேயினால், பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் முன் மொழியப்பட்டது.
இந்த முன் மொழிவு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.