பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
பிரித்தானிய இளவரசி ஹேன் (Princess Anne), எதிர்வரும் ஜனவரி 10 முதல் 13 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவு விழாவுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இளவரசிக்கு இலங்கை அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.