ஐ. ஏ. காதிர் கான்
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில், திஹாரிய – தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை மாணவி எம். ஆர். சஜீஹா 186 புள்ளிகளைப் பெற்று, கம்பஹா மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இவர், நாம்புலுவ பஸ்யால பாபுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் ரீ.எம். ரிம்ஸான் – திஹாரிய, அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் ஆசிரியை என்.எச். சுரையா ஆகியோரின் புதல்வியுமாவார்.