ஐ. ஏ. காதிர் கான்
சட்ட விரோதமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, விமான நிலைய பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், துபாயிலிருந்து (11) அதிகாலை 3.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சந்தேக நபரின் பயணப் பொதிகளைப் பரிசோதித்த போது, 2 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும், விமான நிலைய பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.