பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
காஸா அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 297 பலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற மோதல்களில் 550க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக காஸாவின் சுகாதார அதிகாரிகள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் சுமார் 18,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், சுமார் 49,500 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன,