பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
மீண்டும் ஒருமுறை உணவகங்களில் சிற்றுண்டி உள்ளிட்ட இதர உணவுகளின் விலையை உயர்த்த வேண்டும் என அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை, இறைச்சி, மீன், சீனி மற்றும் கீரி சம்பா அரிசி போன்றவற்றின் விலைகள் அதிகரித்ததன் காரணமாகவே இந்த விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உணவுப் பொருட்களின் விலைகள் எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பெரும்பாலான உணவகங்களில் உணவுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.