ஐ. ஏ. காதிர் கான்
அண்மையில் 2022 (2023) வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மினுவாங்கொடை – கல்லொழுவை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய 55 மாணவர்களில் 42 பேர் (76.36 வீதமானோர்), உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக, அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம் தெரிவித்துள்ளார்.
இம்மாணவர்களில், பாயிமா அனஸ் – 8ஏ 1பீ, எம்.ஆர். எம். அஸ்ஜத் – 5ஏ 2பீ 2சீ, ஏ.எஸ்.எப். ஸைனப் – 4ஏ 3பீ 2சீ, எம்.கே.எப். ஸபீயா – 4ஏ 2பீ 3சீ, எம்.ஏ.எம். ராபித் – 2ஏ 3பீ 3சீ 1எஸ், எஸ்.எப். ஸலாஹ் – 2ஏ 2பீ 5சீ ஆகியோர், சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளதாகவும் அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்