மறைந்த முன்னாள் அமைச்சர் அஷ்ரப்பின் 75ஆவது பிறந்த தின கொண்டாட்டங்களுக்கான நிகழ்வுகளை தேசிய ஐக்கிய முன்னணி ஏற்பாடு செய்துள்ளனர்.
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத்சாலியின் தலைமையில், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 12.12.2023 அன்று மாலை 4 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க கலந்துகொள்ள உள்ளதோடு, முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்நிகழ்வில் விருந்தினராகவும் கலந்துகொள்ள உள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தமிழில் உரையாற்ற உள்ளார். சிங்கள மொழியில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசபிரிய உரையாற்ற உள்ளார்.