பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கு இடையிலான புகையிரத சேவைகள் 6 மாதங்களுக்கு இடைநிறுத்தம்.
பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம்/ காங்கசெந்துறை இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு ரயில் பாதையில் திட்டமிடப்பட்ட 2ஆம் கட்ட பராமரிப்புப் பணிகள் மஹவ மற்றும் அனுராதபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் 7 ஜனவரி 2024 முதல் மேற்கொள்ளப்படும் மற்றும் 6 மாதங்களுக்குள் முடிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இந்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டையில் இருந்து மஹவ புகையிரத நிலையம் வரையிலும் காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரையிலும் மாத்திரம் புகையிரதங்கள் இயங்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது