ஐ. ஏ. காதிர் கான்
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள களனிப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடம் மற்றும் தொழில் நுட்ப பீடம் ஆகியன, (11) திங்கட்கிழமை மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என, பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆம் திகதி பல்கலைக் கழக பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் இரு உத்தியோகத்தர்களை, மாணவர்கள் குழுவொன்று வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று தாக்கிய சம்பவத்தினால், மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் மூடப்பட்டன.
பின்னர், சம்பந்தப்பட்ட நான்கு மாணவர்களின் வகுப்புக்களை இடைநிறுத்த பல்கலைக் கழக நிர்வாகம் முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.