ஐ. ஏ. காதிர் கான்
எயார் அரேபியா, அபுதாபியிலிருந்து கட்டுநாயக்கவுக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையொன்றை ஆரம்பித்துள்ளது.
முதலாவது பயணத்தை மேற்கொண்ட எயார் அரேபியா விமானம், (08) வெள்ளிக்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 158 பயணிகள் மற்றும் 8 விமானப் பணியாளர்களுடன் “3L-197” என்ற எயார் அரேபியா விமானமே, அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்த விமானம், பிரதி புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து, மீண்டும் அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு அபுதாபிக்கு புறப்படும் என, கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன.