பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் கடந்த மூன்று நாட்களாக இரத்தப் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளமையால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலைமையால் நோயாளர்கள் பணம் செலுத்தி இரத்த பரிசோதனை அறிக்கைகளை தனியார் பரிசோதனை கூடங்களில் இருந்து கொண்டுவர வேண்டியுள்ளதுடன், இரத்த பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு அபேக்க்ஷ புற்றுநோய் வைத்திய சாலையும் இடை நிறுத்தப்பட்டுள்ளது வறிய நோயாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலைமை தொடர்பில் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஒன்று தெரிவிக்கையில் அரசாங்க தரப்பு இன்னொன்றை கூறுகின்றனர் இவற்றினை விசாரிப்பதட்காக ஊடகங்கள் தொடர்பு கொள்ளும் போது அரசாங்கம் அமைதி காக்கிறது.