கொழும்பு
களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீடம், வணிகப்பீடம், முகாமைத்துவப்பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் என்பவற்றின் கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை(11) முதல் குறித்த கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகள் நிறைவடையும் வரையில், மருத்துவப்பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து கல்வி செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.