இஸ்மதுல் றஹுமான்
மரண வீட்டில் சூதிட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
சீதுவ, லியனகேமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மரண வீட்டில் 7ம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் சிலர் பணம் பந்தயத்திற்கு சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அச் சந்தர்பத்தில் "டியோ" ரக இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத இருவர் குறித்த நபரை மன்னக் கத்தியால்
தாருமாறாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இச் சம்பவத்தில் கட்டுநாயக்க, கொழும்பு வீதி, இலக்கம் 92 ஐ சேர்ந்த தொம்மகே இரோஷன் ரஜின்திர பிரனாந்து என்பவரே மரணமானார்.
இவர் கட்டுநாயக்க, லெஸ்லி குமாரசிங்க மாவத்தையில் “நிவ் அம்ப செவன” எனும் பெயரில் அறைகளை வாடகைக்கு கொடுக்கும் நிலையத்தை நடாத்தி வருகிறார். மேலும் இவர் மரண வீடுகளில் இரவு நேரங்களில் பந்தயத்திற்கு சூதாட்டங்களில் ஈடுபடுபவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மரணமானர் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் அமைப்பின் அங்கத்தவரான காலச்சென்ற மிஹிந்துகுலசூரிய லலித் பின்து என்பவரை மிக நெருக்கமாக பலகிவந்தவர் என்றும் லலித் பின்து விசேட அதிரடி படையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மரணமடையும்போது அவர் பயணித்த காரில் கொலை செய்யப்பட்டவரும் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடாத்தினார். பிரேத பரிசோதனைக்காக சடலம் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இக் கொலை சம்பவம் தொடர்பாக சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர்.