பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
நீர் கட்டணத்திற்கு விலைச்சூத்திரமொன்றை அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அது தொடர்பில் தௌிவுபடுத்தினார்.
நீர் கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க முடியாது எனவும் நீரை பெற்றுக்கொள்வதற்கு மின்சாரம் தேவைப்படுவதாவும் சுட்டிக்காட்டிய சனத் நிஷாந்த, அதற்காக சூத்திரம் ஒன்றை அறிமுகம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.