கொழும்பு
கவனக் குறைவாகவும், அதிவேகமாகவும் வாகனத்தை செலுத்தி மூன்று பேருக்கு மரணத்தை ஏற்படுத்தி மற்றுமொருவரை காயப்படுத்திய குற்றத்துக்காக தனியார் பேருந்து சாரதி ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலல்ல முன்னிலையில் இன்று அழைக்கப்பட்ட போதே, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வழக்கில் பேருந்தின் உரிமையாளருக்கு 15 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து மிரிஹான பகுதியில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
December 6, 2023
0 Comment
249 Views