பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவில் 99 வீதமான மாணவர்கள் பரீட்சை எழுதுவது சிரமம் என கூறி அழுததாகவும் அவர்களின் பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு பரீட்சை மிக கடினமாக இருப்பதாகவும் கூறி குற்றஞ்சாட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் போன்று இலங்கையிலும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இல்லாதொழிக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.