பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
முதல் டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று 05ஆம் திகதி உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த திட்டம் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை மிக விரைவில் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புதிய கிராமம் – புதிய நாடு தேசிய திட்டத்துடன் இணைந்து, உள்துறை அமைச்சு மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் இணைந்து பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவையை அனைத்து பிராந்திய செயலகங்களிலும் செயல்படுத்தி வருகின்றன.