சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள மத்ரஸத்து சபீலீற் றஷாத் மத்ரஸாவில் காத்தான்குடியை சேர்ந்த எம்.எஸ். முஷாப் (வயது-13) எனும் மாணவன் உயிரிழந்த நிலையில் ஜனாஸாவாக மீட்பு.
ஜனாஸா தற்பொழுது சாய்ந்தமருது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ் மரணம் தொடர்பான விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரணம் தொடர்பாக மேலதிக விசாரனைக்காக அவ் மத்ரஸாவின் அதிபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.