பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
தெஹியத்தகண்டி ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய ஒரேயொரு சத்திரசிகிச்சை நிபுணரும் நாட்டை விட்டு வெளியேறியதால், சகல சத்திரசிகிச்சைகளும் முடக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மருத்துவமனை பணிப்பாளரால், சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அவசர அறுவை சிகிச்சை உட்பட 50 அறுவை சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை வைத்தியசாலை உட்பட அருகாமையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு நோயாளர்கள் அனுப்பப்பட்ட போதிலும், அந்த வைத்தியசாலைகளில் நிலவும் நெரிசல் காரணமாக நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே, மருத்துவமனைப் பணிப்பாளர், அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த நெருக்கடியான சூழ்நிலைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.