பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
மின் கட்டணம் செலுத்தாத நிலையில், மின்சாரத்தை துண்டிக்கச்சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் கம்பஹா நகரில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான இரு ஊழியர்களும் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, மின் கட்டணம் செலுத்தாததால் சுமார் 7 இலட்சம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.