அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம்.எஸ்.றதீப் அஹமட் நீதிபதியாக நியமனம் பெற்றுள்ளார். நீதிச் சேவைகள் ஆணைக்குழு அவருக்கான நியமனத்தை 2023.12.01ம் திகதி செயற்படும் படியாக வழங்கியுள்ளது.
அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயம், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) என்பனவற்றின் பழை மாணவரான எம்.எஸ்.றதீப் அஹமட் யாழ். பல்கலைக்கழக LLB பட்டதாரியுமாவார்.
கடந்த 07 வருடங்கள் சட்டத்தரணியாக கடமையாற்றி வந்த நிலையில் போட்டிப்பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை என்பனவற்றுக்குத் தோற்றி, அவற்றில் சித்தியடைந்த றதீப் அஹமட் நீதிபதியாக நியமனம் பெற்றுள்ளார்.
இளமையிலயே பல்வேறு திறமைகள், ஆற்றல்களுடன் மிளிர்ந்த றதீப் அஹமட் சிறந்த சமூக சேவையாளருமாவார்.
நீதிபதி றதீப் அஹமட், ஓய்வு நிலை இலங்கை வங்கி முகாமையாளர், அன்புக்குரிய யூ.எம்.மீராசாஹிபு (பௌர்டீன்), ஐ.எல்.ஹபீபா உம்மா தம்பதியினரின் புதல்வராவார்.