ஐ. ஏ. காதிர் கான் –
பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாதணிகள் வழங்குவதற்கான வவுச்சர் வழங்கும் திட்டம், இன்று (04) திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் ஊடாக, 50 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு பாதணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன. இதன்படி, வட கொழும்பில் உள்ள இரண்டு பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு இன்று (04) வவுச்சர்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதேவேளை, எந்தவொரு நபருக்கும் இந்த வவுச்சர்களை, பணம் கொடுத்து பெற்றுக் கொள்ள முடியாது என, கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன், பதிவு செய்யப்பட்ட விற்பனை நிலையங்களின் ஊடாக இந்தப் பாதணிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும், டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை மாணவர்களள் இவ்வாறு தங்களுக்கான பாதணிகளைக் கொள்வனவு செய்ய முடியும் என்றும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.