ஐ. ஏ. காதிர் கான்
கன மழை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகன சாரதிகள் 50 மீற்றர் தூரம் அளவுக்கு இடை வெளியில் பயணிக்குமாறு, அதிவேக நெடுஞ்சாலைகள் போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்துகின்றனர்.
கொழும்பு – கட்டுநாயக்க, கொழும்பு – மீரிகம மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இது தொடர்பிலான எச்சரிக்கை இலத்திரனியல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வீதிகள் இருண்டு காணப்படுவதால், வாகனங்களின் முன் பக்க விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை இயக்குமாறும், நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம் மேலும் கேட்டுள்ளனர்.