பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள்.
இவர்களில் 744 பேருக்கான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
454 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள். 07 வெளிநாட்டுப் பிரஜைகள் மரண தண்டனை கைதிகளாக உள்ளனர் என,
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, மரண தண்டனை, ஆயுள் தண்டனை கைதிகள் தொடர்பில் அமைச்சர் சுட்டிக்காட்டியதாவது : –
சிறைச்சாலைகளில் 346 ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளனர்.
இவர்களில் 100 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள்.
அத்துடன் சிறைச்சாலைகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 10784 கைதிகளில் 61.3 சதவீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது.