பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 8,400 ஊழியர்களை உறுதிப்படுத்தும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் அதிகளவான அரச ஊழியர்கள் பணியாற்றுவதாகவும்,
இந்த அமைச்சில் 495,000 ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சு மற்றும் அதன் நிறுவனங்களில் 18 முதல் 20 வருடங்களாக நிரந்தர நியமனம் பெறாத பழைய ஊழியர்கள் இருப்பதாகவும்,
அவர்கள் நிரந்தர நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார.