கொழும்பு
மருத்துவப் பற்றாக்குறையால் மூடப்பட்ட 40 வைத்தியசாலைகளை பயிற்சி மருத்துவர்களை நியமித்து மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு நியமனங்களை வழங்கும்போது இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
குறிப்பிட்ட வைத்தியசாலைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.