கொழும்பு
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (30) காலை டுபாய் சென்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்று முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை துபாய் எக்ஸ்போ நகரத்தில் நடைபெறுவதுடன், அதில் அரசுத் தலைவர்கள், பொதுத் தனியார் துறை பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த வருட மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.