ஐ. ஏ. காதிர் கான்
தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் தேசிக்காய் மூவாயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக, சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், நாட்டின் பல பகுதிகளில், தற்போது தேசிக்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில பகுதிகளில் 100 கிராம் தேசிக்காய் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், சந்தைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, தேசிக்காயின் விலை அதிகரித்துள்ள நிலையில், வல்லாரைக் கீரையின் விற்பனை அதிகளவில் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.