கொழும்பு
கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் 3,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
தற்போது பெய்து வரும் அதிக மழையுடன் இந்த நிலைமை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“கொழும்பில் தற்போது 3,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 80% டெங்கு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பரில் இது மேலும் அதிகரிக்கலாம் என்று எங்களுக்குத் தெரியும்” என கூறினார்.
இதற்கிடையில், 320 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருந்ததாக தெரிவித்த வைத்திய அதிகாரி, அவர்களுக்கு ஊட்டச்சத்து உணவுகளை வழங்கியதன் மூலம் குழந்தைகளின் எண்ணிக்கையை 102 ஆகக் குறைக்க முடிந்தது என்றும் கூறினார்.