கொழும்பு
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் கல்சியம் மற்றும் விற்றமின் ஆகிய மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக சிறுமிகளுக்கு வழங்கப்படும் HPV தடுப்பூசி ஒரு வருடமாக கிடைக்கவில்லை என தாய்மார்களினால் குறிப்பிடப்படுகிறது.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் வழங்கப்படும் கல்சியம் மற்றும் விட்டமின் மருந்துகள் பல மாதங்களாக கிடைக்காததன் காரணமாக வெளியில் இருந்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை என அரசு குடும்ப நலப் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பல மாவட்டங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசு குடும்ப நலப் பணியாளர் சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.