ஐ. ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை – கட்டுநாயக்க செய்தியாளர் )
கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்துவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என, விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சராக, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் (28) செவ்வாய்க்கிழமை காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதற்காக அனைவரையும் அழைப்பதாகவும், இதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனவும், விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டார்.