- ஐ. ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை – கட்டுநாயக்க செய்தியாளர் ) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள், எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்படவுள்ளதாக, இலங்கைப் பரீட்சைத் திணைக்கள வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
2023 மே மாதம் 29 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெற்ற இந்தப் பரீட்சைக்கு, சுமார் 300,000 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தனர்.
கடந்த உயர்தரப் பரீட்சை நடாத்துவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் விடைத்தாள் மதிப்பீடு செய்வதில் ஏற்பட்ட தாமதம் என்பன, இந்த பெறுபேறுகளை வெளியிடுவதில் பாதிப்பை ஏற்படுத்தியதாக, திணைக்களப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வெளியாகும் என, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (28) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதவிர, 2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை, 2024 ஆம் ஆண்டு மே மாதம் அல்லது ஜூன் மாதத்தில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அமைச்சர் மேலும் சுட்டிக் காட்டினார்.
November 28, 2023
0 Comment
271 Views