ஐ. ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை – கட்டுநாயக்க செய்தியாளர் )
திவுலப்பிட்டிய பிரதேசத்தில் விநியோகிப்பதற்கு தயார்படுத்தப்பட்டிருந்த, சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக, திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், திவுலப்பிட்டிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை சோதனையிட்டபோது, இந்தப் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதோடு, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் சில காலமாக இருந்து போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர் என, விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.