பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
6 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் நடைமுறை படுத்தப்பட்ட உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் படி சீனா, இந்திய, ரஷ்யா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சுற்றுலா கைத்தொழிலை கட்டியெழுப்பும் முன்னோடி நிகழ்ச்சி திட்டமாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை இத் திரைப்படம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது
எனவே இராஜதந்திர, உத்தியோகபூர்வ, பொது அலுவலர்கள் மற்றும் ஆரம்ப கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கும் குறித்த நாடுகளிளின் பிரஜைகள் இந்த திட்டத்தின் கீழ் கண்டனம் இன்றி இலவசமாக விசாவை பெற்றுக் கொள்ள முடியும்.
அடுத்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை சீனா, இந்திய! இந்தோனேசியா, ரஷ்யா, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரஜைகள் இலங்கை வருவதற்கு முன்பே கட்டாயமாக இலத்திரனியல் பயண அனுமதிக்காக விண்ணப்பித்து அதற்கான அனுமதியைப் பெற்று கொள்ள வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் 30நாட்கள் கட்டணம் இன்றி இலவச விசா காலத்தை அனுபவிக்க முடியும்
அத்துடன் இந்த திட்டத்தின் கீழ் இலவச இலத்திரனியல் பயண அனுமதிக்கு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.