விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளளார்.
பதவி நீக்கத்துக்கான கடிதம் ஜனாதிபதி செயலகத்தினால் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சு உள்ளிட்ட சகல அமைச்சு பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் நாட்டில் நிலவி வருகின்றன.
இந்தநிலையில், தற்போதைய சூழலில் தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும், ஜனாதிபதியும், சாகல ரத்நாயக்கவுமே ஏற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.