கொழும்பு
சீதுவை, கட்டுகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு T56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.