கொழும்பு
மலையக புகையிரத பாதையை மீள சீர்செய்ததன் பின்னர் பதுளை வரையிலான ரயில் பயணங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நாட்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, பெய்து வரும் கனமழையின் காரணமாக, மலையக ரயில் பாதையில் மரங்கள் மற்றும் மேடுகள் விழுந்து ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் தடைகள் நீக்கப்பட்டு புகையிரத பாதை சீரமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.