கொழும்பு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி அதன் பணிகளை நிர்வகிப்பதற்காக இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்த விளையாட்டுத்துறை அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை (27) வரை ஒத்திவைக்கப்பட்டது.
சோபித ராஜகருணா மற்றும் டி. என்.சமரகோன் ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இன்று (24) மேலதிக சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
இதனையடுத்து மேலதிக சமர்ப்பணங்கள் மீதான பரிசீலனை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க.