கொழும்பு
பெய்ஜிங், லியோனிங் மற்றும் சீனாவின் பல நகரங்களில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் புதிய வகை நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நோய் குறித்த அனைத்து தகவல்களையும் வழங்குமாறு உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், சீன குழந்தைகள் மத்தியில் பரவி வரும் நிமோனியா தொற்றுநோயை மூடி மறைக்க சீன அதிகாரிகள் செயல்படுவதாக தைவான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.