ஓமான் நாட்டின் 53 வது தேசிய தினம் கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் (20) ஓமான் நாட்டின் இலங்கைக்கான துாதுவர் அஹமட் அலி செட் அல் ராசிடி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த கலந்த கொண்டார்.
இங்கு உரையாற்றிய இலங்கைக்கான ஓமான் துாதுவர் –
ஓமான் -இலங்கை நட்புறவுகள் கடந்த நான்கு தசாப்தங்களாக இரு நாடுகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. அத்துடன் இலங்கைக்கு பெட்ரோல் , எரிவாயு போன்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இலங்கை யுடன் ஒப்பந்தம் செய்து அந் வியாபார நடவடிக்கையில் நடைமுறையில் உள்ளன. ஓமானிய முதலீட்டாளார்கள் இலங்கையில் முதலீடு செய்து புடவை,மற்றும் தேயிலை போன்ற இங்குள்ள உற்பத்திகள் ஓமான் நாட்டுக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அத்துடன் வாரம் மூன்று முறை ஓமான் விமானம் கொழும்பு வந்தடைகின்றது. அதனை நாளாந்த விமான சேவையை விரிவாக்குவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதன் மூலம் ஓமானியர் இலங்கை சுற்றுலா துறையின் பங்கு எடுத்துக் கொள்வார்கள்.
அத்துடன் இலங்கையைச் சேர்ந்த ஆசிரியர்கள்.பொறியாளர்கள், தொழிலாளர்கள்.வைத்தியர்கள், தாதியர்கள் ஓமான் தொழில் வாய்ப்பை பெற்று அங்கு சேவையாற்றி வருகின்றனர்.
ஓமான் நாடு மிகவும் வருத்தத்தை தெரிவிக்கின்றது பலஸ்தீன் மன்னை மீட்டெடுப்பதற்கு அரபு நாடுகளின் புனித பூமியான பலஸ்தீனில் நாட்டுக்கும் அந்த வாழ்ந்த மக்கள் குழந்தைகள் கொலை செய்யப்படுவதையும் ஓமான் வன்மையாக கண்டிக்கின்றது. ஓமான் பலஸ்தீன் மக்கள் சார்பாக நமது உதவிகளையும் செய்து வருவதாகவும் துாதுவர் அங்கு உரையாற்றினார்
இந் நிகழ்வில் வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சர்கள், இலங்கையில் வாழும் ஓமானியர்களும கலந்து சிறப்பித்தனர்.