இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமைர்வு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 146இன் பிரகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்ச சனத் நிஷாந்த பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதன் காரணமாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இதன்படி, இன்று (22) முதல் இரண்டு வாரகாலத்திற்கு தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.