கொழும்பு
நாட்டில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டும் நடத்தப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்தோடு 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களையும் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.