பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
கவிதைத் துறையில் நோபல் உலக சாதனையை வென்று வந்த மடவளைச் சகோதரி றிஸ்வானா ஜெய்னுலாப்தீன்
கண்டி மாவட்டம் மடவளையைச் சேர்த்த சகோதரி மதீனா தேசிய பாடசாலையின் பழைய மாணவி Riswana Jainulabdeen கடந்த 5.11.2023 அன்று இந்தியா, சென்னையில் நடைப்பெற்ற நோபல் உலக சாதனையில் தனது அன்புத் துணைவர் ஆசாத்துடன் பங்கேற்று விருதினை பெற்று வந்தார்.
100 கவிஞர்கள் 100 கவிதைகள் வீதம் மொத்தம் 10,000 கவிதைகள் கொண்ட கவித்தேனருவி தொகுப்பு நூல்.
தொகுப்பாசிரியர் கவிஞர் என் ஜாகிர் உஷேன் தலைமையில் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான கவிஞர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
எல்லா விதமான கவிதைகளையும் எழுதும் ஆற்றலுடைய அவருடைய கவிதைகள்
” அறுசுவையில் என் வரிகள்” என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது.
மூன்றரை வருடங்களாக எழுத்துத் துறையில் பிரகாசிக்கும் சகோதரி றிஸ்வானா முகப்புத்தகப் போட்டிகளில் கலந்துகொண்டு நிறைய கவிதைகள், ஆக்கங்கள் எழுதி 250க்கும் மேற்பட்ட மின்சான்றிதழ் பெற்றிடுப்பதும், மற்றும் இவருடைய ஆக்கங்கள் வானொலிகளில் ஒலிபரப்பப் படுவதும் சஞ்சிகைகளில் வெளியிடப் படுவதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 2 வருடங்களுக்கு முன்னரும் இந்தியாவில் கவிதை போட்டியில் பங்கு பற்றி விருதொன்றை பெற்றிருக்கிறார்.இவ்வேளையில் கவிஞர் றிஸ்வானா ஜெய்னுலாப்தீன் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார்!
இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்த நண்பர் ஜாகிர் உஷேன் அவர்களுக்கும், எல்லா வகையிலும் முன்னெடுத்து பலசிரமங்களுக்கு மத்தியில் அழைத்துச் சென்ற அன்பு துணைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றார்.