ஐ. ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை – கட்டுநாயக்க செய்தியாளர் )
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான கால நிலையால், ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நீர்கொழும்பு, கட்டான, திவுலப்பிட்டிய, மீரிகம, நாரம்மல, அலவ்வ, பன்னல, வென்னப்புவ, மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள தாழ் நிலப் பகுதிகளுக்கு, இவ்வாறு வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தெதுரு ஓயா, தப்போவ, வெஹேரல கல, லுணுகம் வெஹெர, மவ் ஆர மற்றும் உட வலவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக, நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பொகவந்தலாவவில் பெய்த கடும் மழையினால், கெசெல் கமுவ ஓயா பெருக்கெடுத்ததில், பொகவந்தலாவவின் தாழ் நிலப் பகுதிகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.