2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (19) நடைபெறவுள்ளது.
இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் போட்டியை நடத்தும் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையே இந்த போட்டி இடம்பெறவுள்ளது.
ஆரம்ப சுற்றுப் போட்டிகளின் 09 போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்றுள்ள இந்திய அணி, மிகவும் வலுவான மனநிலையுடன் இறுதிப் போட்டிகளுக்குள் பிரவேசித்துள்ளமை விசேட அம்சமாகும்.
அவர்கள் பங்கேற்ற 9 போட்டிகளில், ஒரு போட்டி கூட தோல்வியடையவில்லை.
இந்தியா அனைத்து போட்டிகளிலும் மிக எளிதாக வெற்றி பெற்றது.
ஆரம்ப சுற்றில் இரு பலம் வாய்ந்த அணிகளாக இருந்த தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் என கருதப்பட்டாலும்,
அந்த இரு நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தன.
இருப்பினும், அரையிறுதியில் நியூசிலாந்து மட்டுமே முழு தொடரிலும் இந்தியாவுக்கு சிறிய அழுத்தத்தை கொடுக்க முடிந்தது.
இன்றைய போட்டியில் இந்திய அணியின் எதிரணியான அவுஸ்திரேலியாவும் ஆரம்ப சுற்றில் இந்தியாவிடம் 06 விக்கெட்டுகளால் தோல்வியடைந்தது.
எது எப்படியோ, இந்த ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணம் இதுவரை இல்லாத வகையில் செய்திகளை உருவாக்கிய போட்டி என்பதை சந்தேகமில்லாமல் கூறலாம்.
இந்த ஆண்டு எப்படியாவது இந்தியா உலகக் கிண்ணத்தை வெல்லும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
அதற்காக ஐசிசி விதிகள், தொழில்நுட்பம், ஆடுகளங்களைப் பயன்படுத்துதல் என பல்வேறு உத்திகளை இந்தியா கையாண்டுள்ளதாக சமூக வலைதள செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவுஸ்திரேலியா
5 முறை உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.
அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் இதற்கு.