கொழும்பு
சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி Shen Yiqin உள்ளிட்ட தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர்.
இந்த குழுவினர் மூன்று நாட்களுக்கு இலங்கையில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காலப்பகுதியில் அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் தூதுக்குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாலைதீவு ஜனாதிபதியின் பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்ட சீன பிரதிநிதிகள், அதன் பின்னர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.
இதற்கிடையில், உத்தேச புதிய முதலீட்டு சட்டமூலத்தை தயாரிப்பதில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பது மற்றும் ஈர்ப்பது குறித்த நிபுணத்துவத்தை வழங்குவதற்கு வியட்நாம் இணைக்கம் தெரிவித்துள்ளது.